Close Menu
    What's Hot

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    Featured

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    editor5By editor5August 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 16 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் 2026-27 நிதியாண்டு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிறுத்தி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குடிசைகளில் வசிக்கும் ஏழை மக்களின் வீட்டுவசதி மேம்பாட்டிற்காக கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ரூ.3.10 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலையான வீடு பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    தொழில்நுட்பத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக, இந்தியாவிலேயே முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நகரம் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதற்கு ‘அறிவகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஏஐ பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறைக்கடத்தி சோதனை ஆய்வகம் மற்றும் ஏஐ-குவாண்டம் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இதற்கான ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    உலகில் சான் பிரான்சிஸ்கோ, பெய்ஜிங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற ஏஐ நகரங்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழக ஏஐ அமைப்பு சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் குடிமக்கள் சேவைகளில் பயன்படுத்தப்படும். எரிசக்தித் துறையிலும் பெரும் முன்னேற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுக் கூரைகளில் சூரிய மின் பலகைகள் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

    சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.ரூ.1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். பழைய 40 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்ற ரூ.2,000 கோடி செலவிடப்படும். ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடியும், குடியிருப்புகளில் சார்ஜிங் வசதிக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எரிசக்தித் துறைக்கு மொத்தம் ரூ.15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை உலகத் தரத்திற்கு உயர்த்த ரூ.25 கோடி நிதி வழங்கப்படும்.இந்த அறிவிப்புகள் தமிழகத்தை தொழில்நுட்ப மற்றும் நிலையான வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    tn assembly tn budget TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களை கவர்ந்த பட்ஜெட் அறிவிப்புகள்… 8 கிராம் தங்கம் முதல் வெற்றி மடிக்கணினி வரை!
    Next Article ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?
    editor5

    Related Posts

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    August 5, 2026

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    August 5, 2026

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.