Close Menu
    What's Hot

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»ANI Vs Wikipedia அப்படி என்னங்க சண்டை?…
    இந்தியா

    ANI Vs Wikipedia அப்படி என்னங்க சண்டை?…

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ani wiki
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேய்-க்கும் பேய்-க்கும் சண்டை, அத ஊரே வேடிக்கை பார்க்குதாம்.. காஞ்சனா படத்தில் இடம்பெற்ற வசனம்.. அது கிட்டத்தட்ட இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது..

    விஷயம் என்னன்னா?… பொதுவாக நமக்கு தெரிந்த விஷயமோ, தெரியாத விஷயமோ அதுபற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணையத்தில் விக்கிபீடியாவில் சென்று தேடுவோம். (விக்கிபீடியா தகவல்களின் அடிப்படையில் ஒருவரையோ, ஒரு அமைப்பையோ எடைபோடக் கூடாது என்பதே என் திண்ணமான கருத்து.)

    ஆன்லைன் என்சைக்ளோபீடியா, அதுவே விக்கிபீடியா. 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி விக்கிபீடியா தனது சேவையை துவக்கியது. ஜிம்மி வேல்ஸ் மற்றும் லேரி சேங்கர் இதனை ஆரம்பித்தனர். “”இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனித அறிவின் கூட்டுத்தொகையை இலவசமாகப் பெறும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.”” இதுதான் விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம். “தகவல்கள் அதுவும் இலவசமாக” என்று ஒற்றை வார்த்தையில் இதனை குறிப்பிடலாம்.

    இப்படிப்பட்ட விக்கிப்பீடியாவில் நீங்கள் உங்களைப் பற்றிக் கூட ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதனை யார் வேண்டுமானாலும் மேம்படுத்தவும் முடியும். உலக அளவில் விக்கிப்பீடியாவை பயன்படுத்தும் 5-வது பெரிய நாடு இந்தியாவாகும். ஏறத்தாழ 78 கோடி பேர் இந்தியாவில் விக்கிப்பீடியாவை நாள்தோறும் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    இந்தநிலையில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற செய்தி முகமையான ANI பற்றியும் விக்கிப்பீடியாவில் ஒரு பக்கம் இருந்தது. (!) அதில் ANI எப்போது ஆரம்பிக்கப்பட்டது, என்ன வரலாறு என்று வரிசையாக தகவல்கள் இருந்தன. கூடவே  “propaganda tool for the incumbent government.” நடப்பு ஆட்சியின் கொள்கை பரப்புக் கருவியாக ANI செயல்படுகிறது என்றும் ஒருவரி இடம்பெற்று இருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI  நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் அதில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவின் நடுநிலைத்தன்மை குறித்து கவலைத் தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் கட்டுரைகளில் திருத்தம் செய்ய அனுமதித்தால் அவரவர் விருப்பத்திற்குரிய ஒன்றாக அது இருக்குமே தவிர, உண்மை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். உங்களுக்கு இந்தியாவில் வேலைசெய்ய விருப்பம் இல்லை என்றால் இங்கு இருக்காதீர்கள் என்று காட்டமுடன் கூறியிருந்தார்.

    இதில் விளக்கம் அளித்திருந்த விக்கிப்பீடியா நிறுவனம், தாங்கள் கட்டுரைகளை எழுதுவதில்லை, திருத்துவதில்லை என்றும் பயனர்கள் தான் அதனை உருவாக்கி மேம்படுத்துவதாகவும் கூறியிருந்தது. நாங்கள் வெறும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் தான் என்பது அதன் வாதம்.

    ஆனால் தன்னார்வலர்களால் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது, தங்களால் அதில் திருத்தங்கள் செய்யமுடியவில்லை என்பதால் தான் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளதாக ANI  நிறுவனம் கூறியது.

    இந்த வழக்கில் தான் விக்கிப்பீடியா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 2019-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு கட்டுரைக்கு 2024-ல் வழக்குத் தொடுக்கப்பட்டு, 2025-ல் மேல்முறையீடு. மகிழ்ச்சி,…..

    #aninews#Wikipedia#DelhiHC

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமித் ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்….
    Next Article காப்புரிமை- இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்…
    admin
    • Website

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.