Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவிப்பு!!
    இந்தியா

    இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவிப்பு!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் மூன்று முப்பத்தைந்து மணிக்கு இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், இதன‍ை அடுத்து இருதரப்பிலும் மாலை ஐந்து மணி முதல் சண்டையை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்‍கொண்டுள்ளதாகவும் கூறினார்.

    வான், தரை மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் மாலை ஐந்து மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
    நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

    இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா விடியவிடிய முயற்சி மேற்கொண்டதகாவும், சண்டை நிறுத்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், இந்தியாவும் – பாகிஸ்தானும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

    pic.twitter.com/lRPhZpugBV

    — Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025

    இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சண்டை நிறுத்தத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான சமரசமற்ற இந்தியாவின் நிலைப்பாடு தொடரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    India and Pakistan have today worked out an understanding on stoppage of firing and military action.

    India has consistently maintained a firm and uncompromising stance against terrorism in all its forms and manifestations. It will continue to do so.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 10, 2025

    donald trump india jai shankar pakistan vikram mishri இந்தியா டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் விக்ரம் மிஸ்ரி ஜெய் சங்கர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரஸ் மைதானம் நிலம் தொடர்பான வழக்கு… புலம்பும் ப்ளூ பேர்ல் நிறுவனம்.. கமுக்கமாக இருக்கும் காங்கிரஸ்..
    Next Article பொய் புளுகும் பாகிஸ்தான்! பொளந்து கட்டும் இந்தியா!
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    October 10, 2025

    தற்காலிக போர் நிறுத்தம்; பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு – ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல்

    October 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.