எம்புரான் எப்படி வந்திருக்கிறது? என்று தமிழ் சினிமா விமர்சகர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் தமிழ், தெலுங்கு சினிமாக்களை பார்த்து, மல்லுவுட் கமர்சியல் குப்பையாகி வருகிறது என்கிறார்கள். இந்த தூய சினிமா பார்வையாளர்கள்.
ஆனால் உண்மை என்ற ஒன்று உண்டு. அது என்னவென்றால். சினிமா என்பது, கலைகளில் புரளும் வணிகம். மல்லுவுட் எதார்த்த வகை சினிமாவுக்கு பெயர்போனது. அதன் பூலோகம் அப்படியானது இயல்பாகவே கம்யூனிஸ்ட் மனம் கொண்ட மக்கள் என்பதால் எல்லாவற்றையும் எளிமையாகவே எதிர்பார்ப்பார்கள்.
ஆனால், முன்னொரு காலத்தில் இந்திய சினிமா என்பது அது இந்தி சினிமாக்கள் தான். அது மேல்தட்டு மக்களின் கொண்டாட்டங்களையே திரையில் பிரதிபலித்தது. அதன் அளவில் அது அப்படி தான், இப்பொழுதுதான் மாறிக்கொண்டு இருக்கிறது. Animals, Jawan சினிமாக்கள் போல, தமிழும் தெலுங்கும் நடுத்தர மக்களை பிரதிபலித்தது. கன்னடம் இவர்களை பார்த்து அப்படியே பிரதி எடுத்துக்கொண்டது. வங்கமும், கேரளமும் தான் ஆர்ட் வகை சினிமா என்று சொல்லகூடிய மிகை எதார்த்தவாத சினிமாக்களை கொடுத்தது. தமிழிலும் தெலுங்கிலும் சோதனை முயற்சிகள் செய்தாலும், அவர்களால் வியாபாரத்தில் வெற்றிபெற முடியவில்லை. டிராகன் மாதிரி சினிமாக்கள் சின்ன படங்களாக இருந்தாலும் அது இன்றைய ஜென்- Z டீன்களை பிரதிபலித்தது. துள்ளுவதோ இளமை போல…..!
2000-களில் சினிமாக்களின் முகம் மாறத் தொடங்கியது. அது உலக அரங்கில் எல்லா சினிமாக்களை பார்க்கமுடியும் என்கிற வாசல் அது. ஆனால், அது தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையிலும் பலன் தரவில்லை. காரணம், நல்ல படங்களை மட்டும் பார்ப்போம் என்கிற தூய சினிமா பார்வையாளர்கள். டி.வி.டிகளை மட்டும் நாடினார்கள். அதுவும் காசுகொடுத்து வாங்காமல் copy paste-ல் பார்த்துக் கொண்டார்கள். நல்ல சினிமாக்களை எதிர்பார்ப்பவர்கள் எல்லாம், ஓசியில் சினிமா பார்த்தால் தயாரிப்பாளர் பிச்சை பாத்திரம் தான் ஏந்துவார் ..
ரஜினி- ஷங்கர் – காம்பினேசனில் வெளியான சிவாஜி படம் உலக முழுக்க இந்தி சினிமாக்கள் போல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அது அந்த காலகட்டத்தில் பெரிய தொகை. கிட்டதட்ட முதல் பேன் இந்தியா சினிமா என்றே அதனைச் சொல்லலாம். இன்று தென் இந்தியா சினிமாக்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதற்கு சிவாஜியின் பிள்ளையார் சுழி போட்டது எனலாம். காரணம் ஒன்று தான். அது கமர்ஷியல் சினிமா கூடவே தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம் தரும் மார்கெட் உருவானது. பின் எந்திரன் 2.O அடுத்தடுத்து வந்து 500 கோடியை தொட்டது.
இராஜமௌலியின் பாகுபலி என்கிற PAN INDIA சினிமாவை உருவாக்க, இனியும் பொறுக்கமுடியாது என்று கன்னட சினிமா முழித்துக்கொண்டது. பிரசாத் நீலி KGF-யை உருவாக்கினார். உலகமுழுவதும் இந்த இரு படங்களும் பெரிய ஹிட் ஆயிரம் கோடியை தொட்டது. PAN INDIA சினிமாக்கள் உலகம் முழுக்க பரவத் தொடங்கியது.
உலகம் முழுவதும் மலையாளிகள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே இடத்தில் சேர சினிமா தான் சிறந்த காரண கர்த்தா. எளிமையான சினிமாக்களை அப்படி கொண்டாட முடியாது. அதுக்கு ஒ.டி.டி இருக்கிறது. ஆனால் “லூசிபர்” போன்ற மாஸ் சினிமாக்கள் தான் உலகம் முழுக்க இருக்கிற மலையாள ரசிகர்களை ஒரே நேரத்தில் கடலென திரையரங்கில் கொண்டு வர முடியும். அதற்கு மம்முட்டியும், மோகன்லால் போன்ற மாஸ் ஹீரோக்களால் மட்டுமே முடியும்.
இது தூய யதார்த்தவாத சினிமாக்களை பேசும் நம் தமிழ் பார்வையாளர்களுக்கு தெரியாது. அவர்கள் “நல்ல சினிமாக்களை ஓடிடி மற்றும் டவுன்லோட் போன்ற துறைகளில் வல்லுனர்கள். அவர்களால், சினிமாக்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ பத்து பைசா லாபம் இல்லை. You tube விமர்சகர்களுக்கு வீயூஸ் மட்டும் கிடைக்கும்.
தென் இந்திய சினிமாக்கள் உலக முழுக்க தெரியவேண்டும் என்றால் அதற்கு கமர்சியல் சினிமாக்கள் மட்டுமே, கண்முன் இருக்கும் ஒரே வழி என்பேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் எத்தனை நல்ல மலையாள சினிமாக்களை இந்த தூய பார்வையாளர்கள் திரையரங்கில் சென்று பார்த்து இருக்கிறார்கள். ? அது சாத்தியம் இல்லதாது. துட்டு வேண்டும் அல்லவா???
“எம்புரான்“ போன்ற சினிமாக்கள், மல்லுவுட்டுக்கு தேவை என்பேன். காரணம் “விக்ரம் “வெற்றிதான், கமலை தமிழில் அடுத்தடுத்து வேறு ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்க வைத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழில் ” கூலி”- “தக் ஃலைபும்” உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று நம்புவோம்.
நீங்கள் திரையரங்கில் ஒரு சினிமாவை பார்ப்பதால் மட்டுமே அதன் முழு அனுபவத்தை உணரமுடியும்.
Vijis Palanichamy
