குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.