Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பச்சைப் பட்டுடுத்தி, வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
    தமிழ்நாடு

    பச்சைப் பட்டுடுத்தி, வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1747045899259 converted file
    kallazhagar-dressed-in-green-silk-rose-from-the-vaigai-river
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.
    இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    11ம் தேதி இரவு தல்லாகுளத்தில் விடியவிடிய நடைபெறும் எதிர்சேவையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இந்தநிலையில், 12ம் தேதி காலை பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது, பக்தர்களின் கோவிந்தா, நாராயணா முழக்கம் விண்ணதிர்ந்தது. பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
    வைகை ஆற்றில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவ பெருமாள் கள்ளழகரை வரவேற்றார். இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். பின்னர் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பம்
    Next Article சாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு….
    Editor TN Talks

    Related Posts

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    July 15, 2026

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.