மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இன்று மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாட்டை அழைத்து வந்த மதுரை சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி என்பவரை வலது மார்பில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ச்சியாக மாடுபிடி வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும் உயிரிழந்து வருவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்திய வருவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
