Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தானுடன் காங்கிரஸ் முக்கிய புள்ளிக்கு தொடர்பா… அசாம் முதலமைச்சர் பரபர குற்றச்சாட்டு!!
    இந்தியா

    பாகிஸ்தானுடன் காங்கிரஸ் முக்கிய புள்ளிக்கு தொடர்பா… அசாம் முதலமைச்சர் பரபர குற்றச்சாட்டு!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 3 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இணைக்கப்பட்டுள்ளார். காங்கிரசின் பரிந்துரைகளை மீறி இவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு மறுப்பு:

    இந்த குழுவுக்காக காங்கிரஸ் பரிந்துரைத்த மற்றொரு பெயர் – எம்.பி. கௌரவ் கோகோய் – மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, கோகோய்க்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் இடையே நெருக்கமான உறவுகள் உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    பாகிஸ்தான் பயணம் – அதிர்ச்சி குற்றச்சாட்டு:

    “கௌரவ் கோகோய் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு உளவு அமைப்பின் அழைப்பின் பேரில் பயிற்சி பெற்றுள்ளார். இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாகும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,” என ஹிமந்தா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து அவருக்கு நேரடியாக வந்த அழைப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த பயணம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

    பின்னணி மற்றும் சந்தேகம்

    கோகோயின் மனைவி எலிசபெத் கால்பான், பிரிட்டிஷ் நாட்டு பிரஜையாக இருக்க, பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருக்கமான உறவுகள் வைத்துள்ளதாகவும், ஐஎஸ்ஐ அமைப்புடனும் தொடர்புகள் உள்ளதாகவும் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் பணியாற்றும் நிலையிலும், பாகிஸ்தான் சார்ந்த ஒரு என்ஜிஓவிடம் ஊதியம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

    சந்திக்கத் தயாரென கோகோய் பதில்:

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கௌரவ் கோகோய், “உண்மையில் ஹிமந்தா சர்மாவிடம் ஆதாரம் இருந்தால், ஏன் செப்டம்பர் வரை காத்திருக்கிறார்? உடனே ஆதாரங்களை வெளியிட வேண்டும். எதையும் நேரடியாக சந்திக்க தயார்” எனத் தெரிவித்தார்.

    congress india pakistan Sasi tharoor காங்கிரஸ் கூட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவின் இலக்கு வளையத்தில் விஜய்.. சிக்குவாரா? தப்புவாரா?
    Next Article குளு குளு என மாறிய சென்னை… விடிய விடிய பெய்த மழை… இன்னும் தொடருமாம்…
    Editor TN Talks

    Related Posts

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.