Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனகாபுத்தூர் மக்களுக்கு மாற்று குடியிருப்புகள்.. எங்கெல்லாம்னு தெரியுமா.. அரசே வெளியிட்ட அறிக்கை?
    தமிழ்நாடு

    அனகாபுத்தூர் மக்களுக்கு மாற்று குடியிருப்புகள்.. எங்கெல்லாம்னு தெரியுமா.. அரசே வெளியிட்ட அறிக்கை?

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anagampthur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த 593 குடும்பங்களுக்கு, தமிழக அரசு இலவசமாக புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஸ்டாலின் நகர் போன்ற பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அடையாறு ஆற்றை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மறு குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    press

    தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில், ஒரு வீடு ரூ.17 லட்சம் மதிப்பில், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு வழங்கப்படும். மேலும், புதிய இடத்திற்கு செல்லும் குடும்பங்களுக்கு ரூ. 5,000 இடமாற்றச் செலவுக்கான உதவித் தொகை, ஒரு வருடத்திற்கு மாதம் ரூ. 2,500 வீதம் ரூ. 30,000 வாழ்வாதாரத் திட்ட உதவி, மற்றும் ரூ. 2,500 மின்சார இணைப்பு கட்டணம் அரசால் வழங்கப்படும்.

    அதே நேரத்தில், ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடும்ப அட்டை மாற்றம், சமூக பாதுகாப்பு உதவிகள், பள்ளிச்சேர்க்கை, சமூக மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

    press1

    மழைக்காலத்தில் வெள்ளம் போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கிலும், அடையாறு ஆற்றின் நீர்வழி சீரமைப்பிற்கும், ஆற்றங்கரையோர மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஒத்துழைக்கும் குடியிருப்பாளர்கள் மாற்றுவிடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒப்புதல் தராத ஆக்கிரமிப்புகளை சட்டபூர்வமாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த சமூக நலத் திட்டத்திற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Adyar River alternative housing Anakaputhur encroachment removal free housing High Court order Keerapakkam livelihood assistance Navalur Perumbakkam police protection ration card update resettlement river restoration sewage prevention social security scheme student school admission Tamil Nadu government Tamil Nadu Urban Habitat Development Board Thailavaram அடையாறு ஆறு அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் இலவச வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவு கழிவுநீர் தடுப்பு கீரப்பாக்கம் குடும்ப அட்டை மாற்றம் சமூக பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு அரசு தைலாவரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நதிநீர் சீரமைப்பு நாவலுர் பெரும்பாக்கம் போலீஸ் பாதுகாப்பு மறு குடியமர்வு மாணவர்கள் பள்ளிச்சேர்க்கை மாற்று வீடு வாழ்வாதார உதவி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோனியின் காலில் விழுந்த சூர்யவன்ஷி… ஐபிஎல்-ல் நடந்த சுவாரஸ்யம்…
    Next Article கணவர் மீது சந்தேகம்… ஃபேக் ஐடி மூலம் கண்காணித்த மனைவி கைது…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.