சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு வெளியான ’ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்தாண்டு வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவைகளை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ”கூலி” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ப்ரோமோ, போஸ்டர்கள், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
https://twitter.com/sunpictures/status/1925927256582480281?ref_src=twsrc%5Etfw
இந்த நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ”என்னைக்கு குறையாத மவுசு” என்ற வாசகத்துடன் POWERHOUSEVIBE என்ற ஹேஷ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை நேற்று இரவு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ”ஜெயிலர் 2” படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.