உருளைக்கிழங்குன்னா சின்னக் குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். பொரியலா செஞ்சாலும் சரி, குழம்புல போட்டாலும் சரி, ஒரு புடி புடிச்சிருவாங்க. சிக்கனை வெச்சு விதவிதமா சமைக்கிற மாதிரி, உருளைக்கிழங்கையும் பல ஸ்டைல்ல பண்ணலாம். அப்படி ஒரு புதுமையான உருளைக்கிழங்கு ரெசிபிதான் “ஆலு கே குட்கே”.
ஆலு கே குட்கேன்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? இது வேற ஒண்ணுமில்லீங்க, நம்ம ஊர்ல செய்யுற உருளைக்கிழங்கு வறுவல் மாதிரிதான். ஆனா, உத்தரகாண்ட் மக்கள் சேர்க்குற ஸ்பெஷல் மசாலாவோட செஞ்சா, இது வேற லெவல்ல இருக்கும். இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு (2 இன்ச்)
கொத்தமல்லி இலை – சிறிதளவு (தண்டு பகுதியுடன்)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
உருளைக்கிழங்கை நல்லா கழுவி தோலை உரிச்சிட்டு ரெண்டா வெட்டிக்கோங்க.
குக்கர்ல உருளைக்கிழங்கை போட்டு மூழ்குற அளவுக்கு தண்ணி சேருங்க. கொஞ்சமா எண்ணெயும், தேவையான உப்பும் போட்டு வேக வைங்க.
ரெண்டு விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு விசில் போற வரைக்கும் வெயிட் பண்ணுங்க.
இஞ்சியை தோல் உரிச்சி சின்னத் துண்டுகளா வெட்டிக்கோங்க. கொத்தமல்லி இலையை நல்லா கழுவி காய வச்சுக்கோங்க.
ஒரு சின்ன உரல்ல கொத்தமல்லி விதைகளை போட்டு நல்லா இடிங்க.
கொஞ்சம் பொடியானதும் அதுல இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நல்லா அரைங்க.
அப்புறம் கொத்தமல்லி இலைகளை போட்டு மசிச்சுக்கோங்க.
இது கூட கரம் மசாலா, காஷ்மீர் மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு தண்ணி ஊத்தி நல்லா கலந்து வச்சுக்கோங்க.
வேக வச்ச உருளைக்கிழங்கை சின்னச் சின்ன துண்டுகளா வெட்டிக்கோங்க.
வாணலில எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.
அதுல பெருங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிங்க.
அரைச்சு வச்ச மசாலாவை போட்டு மூணு நிமிஷம் நல்லா வதக்குங்க.
வெட்டி வச்ச உருளைக்கிழங்கு, தேவையான உப்பு போட்டு நல்லா கிளறுங்க.
மசாலா நல்லா வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினா, சூப்பரான உத்தரகாண்ட் ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!
இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவலை உங்க வீட்ல செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க!*