Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா.. அப்போ இத டிரை பண்ணி பாருங்க!!
    LIFESTYLE

    இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா.. அப்போ இத டிரை பண்ணி பாருங்க!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025Updated:May 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250524 WA0022
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    1. காலை உணவுன்னா இட்லி, தோசைன்னு ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிச்சுப் போச்சா? உங்க வீட்டுல உப்புமான்னா எல்லாரும் மூஞ்சிய சுளிக்கிறாங்களா? கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான, சத்தான ரெசிபி. கோதுமை ரவையும், பாசிப்பருப்பையும் வச்சு ஒரு தடவை உப்புமா செஞ்சு பாருங்க.

    பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி செஞ்சா இன்னும் அட்டகாசமா இருக்கும்.

    பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு – 1/2 கப்

    கோதுமை ரவை – 1 கப்

    எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு – 1/4 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்

    இஞ்சி – 1 துண்டு (துருவியது)

    பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 1 (நறுக்கியது)

    கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

    பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் – 4 கப்

    உப்பு – சுவைக்கேற்ப

    நெய் – 1 டேபிள் ஸ்பூன்

    சட்னிக்கு தேவையான பொருட்கள்:

    தேங்காய் – 1/2 மூடி

    பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்

    வரமிளகாய் – 2

    பூண்டு – 1 பல்

    கறிவேப்பிலை – 1 கொத்து

    உப்பு – சுவைக்கேற்ப

    தண்ணீர் – சிறிது

    தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

    எண்ணெய் – 2 டீஸ்பூன்

    கடுகு – 1/4 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – 1 கொத்து

    IMG 20250524 WA0022

    செய்முறை:

    முதல்ல ஒரு வாணலில பாசிப்பருப்பை லேசா வறுத்து, தண்ணில பத்து நிமிஷம் ஊற வச்சுடுங்க.

    குக்கர்ல எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிங்க.

    அதுல துருவின இஞ்சி, நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் நல்லா வதங்கட்டும்.

    அப்புறம் நறுக்கின தக்காளி சேத்து வதக்குங்க.

    நறுக்கின பீன்ஸ், கேரட், மஞ்சள் தூள் போட்டு நல்லா வதக்கிடுங்க.

    ஊற வச்ச பாசிப்பருப்போட கோதுமை ரவையை ரெண்டு தடவை கழுவி சேத்து கிளறுங்க.

    நாலு கப் தண்ணி ஊத்தி, தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி ரெண்டு விசில் விடுங்க.

    விசில் போனதும் குக்கரைத் திறந்து நெய் ஊத்தி நல்லா கிளறினா சுவையான பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா ரெடி!

    சட்னி செய்ய மிக்சர்ல தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா அரைச்சுக்கோங்க.

    அரைச்ச சட்னியை ஒரு கிண்ணத்துல எடுத்து கொஞ்சமா தண்ணி கலந்துக்கோங்க.

    கடைசியா தாளிக்கிறதுக்கு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு சட்னில கொட்டுங்க.

    இந்த சத்தான, ருசியான பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமாவை தேங்காய் சட்னியோட சாப்பிட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க!

    rava upma Upma wheat கோதுமை ரவா உப்மா
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெட்ரோ முதல் மீனவர் உரிமை வரை: பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கைகள்!!
    Next Article வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா… ஒரு முறை இந்த மாதிரி ப்ரை பண்ணி பாருங்க..சுவை அசத்தலா இருக்கும்!
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச யோகா தினம் 2026!. உடலையும் மனதையும் காக்கும் யோகாசனத்தின் அசாத்திய நன்மைகள்!

    June 21, 2026

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.