Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல்!
    தமிழ்நாடு

    புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250525 WA0007
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்த புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு:

    ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை (மே 23, 2025) மேற்கு வங்காள மாநிலம் புருலியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று (மே 25, 2025) அதிகாலை 1:30 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

    திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமிக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த ரயிலில் கஞ்சா, குட்கா மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது, ரயிலின் S3 கோச் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த சில பைகளை ரயில்வே காவல்துறையினர் கண்டெடுத்தனர். அந்தப் பைகளைச் சோதனையிட்டபோது, அதில் 18.4 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அருகிலிருந்த பயணிகளிடம் விசாரித்தபோது, அந்தப் பைகள் யாருடையது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் கஞ்சா அடங்கிய பைகளைக் கைப்பற்றி, மேலதிக விசாரணைக்காக தமிழ்நாடு போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    தொடர் கடத்தல் முயற்சி: சிசிடிவி கேமரா ஆய்வு

    தமிழ்நாட்டு எல்லைக்குள் கஞ்சா மற்றும் குட்கா பைகளுடன் யாரும் ரயிலில் ஏறி உள்ளனரா என்பது குறித்து சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பிடத்தக்க வகையில், கடந்த இரண்டு மாதங்களில் இதே புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 45 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 40 கிலோவுக்கும் அதிகமான குட்காவும் கடத்தி வரப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பான ஒரு வழக்கில் மதுரையைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடத்தல் சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சா பறிமுதல் குட்கா கடத்தல் திண்டுக்கல் புருலியா எக்ஸ்பிரஸ் போதைப்பொருள் கடத்தல் மதுரை கைது ரயில் சோதனை ரயில்வே போலீஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
    Next Article விஜய்க்கு ஆதரவாக பேசிய பங்கு தந்தை… வன்னியர்கள் மாநாட்டில் நடந்த சம்பவம்…
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.