திண்டுக்கல்லில் சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வடக்கு காவல்நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. தொடர் புகார்களை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்கள் திருடு போன இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வத்தலகுண்டு, தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 35) என்பது தெரியவந்தது.
பின் திண்டுக்கல் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தனிப்படையினர் சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவர் திருடிய 4 ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. பின் சூரிய பிரகாஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.