Close Menu
    What's Hot

    கனிம விற்பனையில் புதிய நடைமுறை.. கூடுதல் கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி..!!

    இன்று காஞ்சிபுரம் செல்கிறார் முதல்வர் விஜய்… தனியார் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு!!

    இன்று தொடங்கும் ரிசர்வ் வங்கி ஆலோசனை.. வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் ஏற்படுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் 2025: குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி!!
    விளையாட்டு

    ஐபிஎல் 2025: குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250525 WA0026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    1. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

     

    டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் பிராவிஸ் 23 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

     

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

     

    231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சுப்மன் கில் (13), ஜோஸ் பட்லர் (5), ரூதர் போர்டு (0), ஷாருக்கான் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாய் சுதர்ஷன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

     

    சென்னை அணியின் பந்துவீச்சில் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

     

    இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தத் தொடரை ஆறுதலுடன் நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இந்தத் தொடரில் 14 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி கடைசி இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும். புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஆட்டங்களில் 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    csk gujarat titans ipl ipl 2025 ஐபிஎல் குஜராத் சென்னை சூப்பர் கிங்ஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசினிமா பாணியில் பைக் திருட்டு… இளைஞர் கைது…
    Next Article தாஜ்மகாலுக்கு ட்ரோன் எதிர்ப்பு கவசம்… தாக்குதல் மிரட்டல் உள்ளதாக தகவல்…
    Editor TN Talks

    Related Posts

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    August 3, 2026

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    August 1, 2026

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கனிம விற்பனையில் புதிய நடைமுறை.. கூடுதல் கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி..!!

    இன்று காஞ்சிபுரம் செல்கிறார் முதல்வர் விஜய்… தனியார் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு!!

    இன்று தொடங்கும் ரிசர்வ் வங்கி ஆலோசனை.. வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் ஏற்படுமா?

    உறுப்பு தானத்தில் தமிழகமே முன்னிலை; விபத்துகளில் அதிகம் இளைஞர்களே உயிரிழக்கின்றனர்!. அமைச்சர் அருண்ராஜ்!

    பாலக்குழி நீர்வீழ்ச்சியில் குளித்த கோவை இளம்பெண் நீரில் மூழ்கி பலி!. நண்பர் உயிருடன் மீட்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.