Close Menu
    What's Hot

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 7 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒப்பந்தம் கையெழுத்து!
    தமிழ்நாடு

    போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 7 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒப்பந்தம் கையெழுத்து!

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250530 WA0004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அரசு தரப்பில் இருந்து மே 29 அன்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதன்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று (மே 29, 2025) குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், ஆறு சதவீத ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முக்கிய அம்சங்கள்:

    ஊதிய உயர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

    சலவைப்படி உயர்வு: சலவைப்படி ரூ.160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இரவுப் பணிப்படி உயர்வு: இரவுப் பணிப்படி ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    கூடுதல் ஊதியம்: இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.1420 முதல் அதிகபட்சம் ரூ.6460 வரை ஊழியர்கள் கூடுதலாக ஊதியம் பெறவுள்ளனர்.

    நிலுவைத் தொகை: நிலுவைத் தொகை 4 தவணைகளாக வழங்கப்படும்.

    அமைச்சர் சிவசங்கர் கருத்து:

    பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “பேச்சுவார்த்தையில், 86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஒவ்வொரு சங்கமும் ஒவ்வொரு விதமான கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. திமுக ஆட்சி அமைந்து, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 14 மற்றும் 15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்மூலம் போக்குவரத்து ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

    இந்தப் பேச்சுவார்த்தையில், 86 தொழிற்சங்கங்களில், 64 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு, கையெழுத்துப் போட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

    Minister sivasankar Transport
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
    Next Article அம்மனுக்கே வாக்காளர் அட்டை: திண்டுக்கல் கொடைரோடு திருவிழாவில் வித்தியாசமான ஏற்பாடு!
    Editor TN Talks

    Related Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    February 19, 2026

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.