Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அண்ணா பல்கலை.வழக்கு – பாஜக வரவேற்பு…
    தமிழ்நாடு

    அண்ணா பல்கலை.வழக்கு – பாஜக வரவேற்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றும், திமுக ஆட்சியில் எஞ்சியுள்ள பாலியல் வழக்குகளுக்கு நீதி கோரியும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தி நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நமது தமிழக பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அறப்போராட்டங்களின் விளைவாகவும், நாம் கொடுத்த அழுத்தங்களுக்கு பதிலாகவும் அண்ணா பல்கலைக் கழக கொடூரச் சம்பவத்தின் நேரடிக் குற்றவாளி ஞானசேகரன் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

    ஆனால் அதே சமயம் இந்த வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த “சார்” யார் என்ற கேள்வியும், ஒருவேளை திமுக-வில் உள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுப்பெற்றுள்ளது.

    காரணம் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசு அமைச்சர் வரை செல்வாக்கு இருந்ததை வெளியான புகைப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. ஆக, ஆளும் அரசின் துணையின்றி அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் ஒரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் தைரியமாக எவரும் உள்நுழைய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

    எனவே மேடைக்கு மேடை சமூகநீதி பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “யார் அந்த சார்” என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை இந்த வழக்கு விசாரணைத் தொடர உத்தரவிட வேண்டும்.

    இந்த சம்பவத்தின் ஆணிவேர் யார் என்பது மக்கள் மன்றத்தில் சரியாக அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர் அரசியல் புள்ளியாக இருந்தாலும் சரி, அரசு அமைச்சராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி. அதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதியை நம்பியிருக்கும் பிற பெண்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்யும் கைம்மாறு.

    மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சம்பந்தப்பட்ட அரக்கோணம் பாலியல் வழக்கு, 10 வயது அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, அயனாவரம் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு, திமுக பொதுக்கூட்டத்தில் பெண் கான்ஸ்டபிளிடம் இளைஞரணி நிர்வாகிகள் அத்துமீறல், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடலூர் திமுக கவுன்சிலர் உட்பட பல பாலியல் குற்றச் சம்பவங்களும் வழக்குகளும் நிலுவையில் உள்ளனவே, அதற்கான விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றனவா?

    அரக்கோணம் வழக்கில் இன்னும் FIR கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் சமர்ப்பிக்க வேண்டும்.

    Anna University Anna University Case Anna University Verdict BJP BJP Reaction BJP Tamil Nadu Education News Higher Education Tamil Nadu Politics அண்ணா பல்கலை வழக்கு அண்ணா பல்கலைக்கழகம் கல்வி செய்திகள் தமிழக அரசியல் பாஜக பாஜக வரவேற்பு வழக்கு தீர்ப்பு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் துவக்கம் – தனுஷ்
    Next Article புதுப் படங்களில் ஏன் இளையராஜா பாடல்களை வைக்கிறார்கள்? என்ன செய்துவிட்டார் ராஜா!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.