தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது.
பின்னர் பங்குச்சந்தை வர்த்தகம் முடிவுற்ற தருணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. இதன்படி சவரனுக்கு ரூ.880 அதிகரித்தது. இதன்மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.72,480-க்கு வியாபாரம் நடைபெற்றது. இதன்படி ஒரேநாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.74,320 என்ற உச்சத்தை தொட்டது. படிப்படியாக இறங்கி வந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்:
31-05-2025 – ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920
30-05-2025 – ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920
29-05-2025 – ஒரு சவரன் ரூ.71,160, ஒரு கிராம் ரூ.8,895
28-05-2025 – ஒரு சவரன் ரூ.71,480 ஒரு கிராம் ரூ.8,935
27-05-2025 – ஒரு சவரன் ரூ.71,960 ஒரு கிராம் ரூ.8,995
26-05-2025 – ஒரு சவரன் ரூ.71,600, ஒரு கிராம் ரூ.8,950
கடந்த சில நாட்கள் வெள்ளி விலை நிலவரம்:
31-05-2025 – ஒரு கிராம் ரூ.111
30-05-2025 – ஒரு கிராம் ரூ.111
29-05-2025 – ஒரு கிராம் ரூ.111
28-05-2025 – ஒரு கிராம் ரூ.111
27-05-2025 – ஒரு கிராம் ரூ.111
26-05-2025 – ஒரு கிராம் ரூ.111