Close Menu
    What's Hot

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்
    சினிமா

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க  சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தை, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், ‘1965-ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெண் சிங்கம் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, செம்மொழி படத்தின் கதையை அவரிடம் கூறினேன். அப்போது மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால், கதையை முழுவதுமாக எழுதும்படி கூறி எனக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், எனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர், புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம், எனது செம்மொழி கதை. கைவிடப்பட்ட அந்த படம், தற்போது, பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    தனது கதையை திருடி ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி கதையையும், பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    மேலும், மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘பராசக்தி’ திரைப்படதை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்
    Next Article சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.