குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். `குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும்.