குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டின் மீது விழுவதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கப்போகிறது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும்.