மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு அரசாங்க சன்மானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வருமானம் உண்டாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் மள மளவென்று லாபம் அதிகரிக்கும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு. மேற்கு திசையில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்வை கொடுக்கும். எதையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று மனம் உறுதிப்படும்.

ரிஷப ராசி அன்பர்களே! ஆசைகள் எல்லாம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். பற்பல வகையில் நன்மைகள் சேரும். தனதானிய சேர்க்கை ஏற்படும். தொழிலில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்படும். கையிருப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெரிய சிறப்பு ஏற்படும். மன அமைதி உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே! தாமதமானாலும் காரிய வெற்றி பெருகின்ற நாள். பற்பல வகையிலும் நன்மைகள் உண்டாகும். நீங்கள் விருப்பப்பட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். அறிவு திறமையால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். தர்ம காரியங்கள் நிகழும். மகான்களின் வாழ்த்துக் கிட்டும். தென்மேற்கு திசையில் இருந்து சிறப்பான செய்தி வந்து சேரும். குருவருள் சித்திக்கும்.

கடக ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலுக்கு எதிராக இருந்த பகைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். அந்நியர்களின் உதவி கிட்டும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உடலை வருத்திய துன்பங்கள் நீங்கும். நன்மைகளும் லாபங்களும் பெருகி கையிருப்பு அதிகரிக்கும். மங்கலச் செலவுகளும் ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே! கேட்ட இடத்தில் உதவி வந்து சேரும் நாள். பெண்களால் நன்மை உண்டாகும். வெளியூர் பிரயாணங்களில் மூலம் வருமானம் அதிகரிக்கும். சிறிய வியாபாரத்தில் கூட நிறைவான லாபம் கிடைக்கும். வேலை இடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்கள் பகை விலகும். கடன் சுமை குறையும். வீண் செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கன்னி ராசி அன்பர்களே!  மிதமான யோக பலன் நடக்கும் நாள். வீண் செலவுகள் வந்து சேரலாம். அதற்கான வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். போட்டியாளர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடைய பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணும் கருத்துமாக நடக்க வேண்டும். பெண்கள் விஷயத்திலும் நிதானம் தேவை. வேலை அலைச்சல் காரணமாக உறக்கம் கெடும்.

துலாம் ராசி அன்பர்களே! எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாள். வீரதீர செயல்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வீர தீர பராக்கிரமங்களில் மனம் செல்லும். பெயரும் புகழும் வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளால் பரிசு கிடைக்கும். மற்றவரிடம் அபிமானம் அதிகரிக்கும். மன நிம்மதி கூடும். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.

விருச்சிக ராசி அன்பர்களே! இன்று முக்கியமான சம்பவங்கள் நடக்கும் நாள். குடும்பத்தில் சுகபோகம் அதிகரிக்கும். தொழிலில் வருகின்ற வருமானத்தால் வங்கி இருப்பு உயரும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தை அதிகரிக்க செய்வீர்கள். போட்டிகளும் பொறாமைகளும் விலகும். நோய் தொல்லைகள் நீங்கும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பயிர்த்தொழில் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். சேம லாபங்கள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே! இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். செல்வந்தர் தொடர்பால் உங்கள் பண தேவை பூர்த்தியாகும். வேலை செய்கின்ற இடத்தில் திறமை வெளிப்படும். பதவி உயர்வு பண வரவு அதிகரிக்கும். கோயில் விசேஷங்களில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டும். அறப்பணிகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பு ஏற்படும். குடும்ப சௌரியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சாஸ்திர புராணங்களின் மீது நாட்டம் வரும். தான தர்மங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே! இன்று உங்கள் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும் நாள் . தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த இலாபங்கள் கிடைக்கும் . நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த மிக முக்கியமான நபரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள் .சில நல்ல நிகழ்வுகள் ,தான தர்மங்களை இன்று நீங்கள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பீர்கள்.பழைய பாக்கிகள் வசூலாகும். நீங்கள் இருக்கும் இடத்தில் செல்வாக்குடன் இருப்பீர்கள் . .உங்கள் மனதிற்கு இதமான உங்கள் பிள்ளைகள் உங்களை நிம்மதியாக வைத்திருப்பார்கள் மகிழ்ச்சியான நாளாக இந்த நாள் அமையும்.

கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான செய்திகள் வந்து சேரும் நாள். ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். குடும்ப சுகம் மேம்படும். பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். தொழில் துறையில் போட்டிகள் விலகும். கையிருப்பு உயரும். உங்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.

மீன ராசி அன்பர்களே! போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் நாள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் வருகை சந்தோஷத்தை கொடுக்கும். ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசு அலுவலகங்களில் நீங்கள் எதிர்பார்த்த வேலை நடக்கும். கல்வியில் பிள்ளைகள் மேம்படுவார்கள். கலையில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் துணிச்சலான செயலால் லாபம் அதிகரிக்கும். தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யும் நிலை உருவாகும்..

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version