மேஷம்: யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளையெல்லாம் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.
மிதுனம்: குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் வெளி வட்டாரத்தில் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுதீரும். அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் நீங்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் ஏற்படும்.
சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களெல்லாம் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். அக்கம்பக்கத்தினரிடம் அளவுடன் பழகுவது நல்லது.
துலாம்: வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் இழுபறிக்குப் பின்னரே முடியும். வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம்: நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலர் பழைய நகையை மாற்றி புது நகை வாங்குவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நீங்கி அமைதி திரும்பும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும்.
மகரம்: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோரிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: எடுத்த வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய தேக்கநிலை மாறும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.


