மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்களுக்கு குருவின் அருள் தேவை. குரு பகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 28ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம், தனுசு, கும்ப ராசியின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் கோடி நன்மைகளை பெறப்போகும் ராசிக்காரர்களைப் பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது.
ரிஷபம்: குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டின் மீது விழுவதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கப்போகிறது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும்.
மிதுனம்: குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளை பார்க்கிறார். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள்
கடகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் அமரப்போவதால் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
சிம்மம்: லாப ஸ்தானத்தில் வந்து அமரும் குரு பகவான் ராஜாதி ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி மேல் வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
கன்னி: தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். குருவின் பொன்னான பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பதவி யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.
துலாம்: ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணமழையில் நனையப்போகிறீர்கள்.
விருச்சிகம்: குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.
தனுசு: உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் உங்கள் ராசி நாதன் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பார்வையால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும்.
மகரம்: குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். `குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும்.
கும்பம்: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார், குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும்.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.