குரு
ராகு  

          

           ராசி

       

 
  கேது
 

தனுசு

   

துலாம்

 

 

கிரகங்களின் பெயர்ச்சி என்பது நாள், மாதம், வருடம் என அமைகிறது. கிரக பெயர்ச்சி, வாக்கியம் மற்றும் திருக்கணிதம் பஞ்சாங்க அடிப்படையில் மாறுபடுகிறது.

அந்த வகையில் திருக்கணிதப் படி, கடந்த மார்ச் 29 தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டரை ஆண்டுகள் கும்பத்தில் இருந்த சனி பகவான், மார்ச் 29ல் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

கடந்த ஓராண்டாக ரிஷப ராசியில் இருந்த குரு பகவான்,  மே 15ம் தேதி ரிஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீனத்தில் இருந்த ராகு பகவான், மே 18ம் தேதி கும்ப ராசிக்கும், கன்னியில் இருந்த கேது பகவான், சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.

இந்த கிரக பெயர்ச்சிகள் திருக்கணித பஞ்சாங்கப்படி நடைபெற உள்ளது.

சரி, குரு மற்றும் ராகு, கேது பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு சிறப்பாக அமைய உள்ளது என்பதை பார்க்கலாம்.

சிறப்பான பொருளாதார வளர்ச்சி நிலையை அடையப் போகும் ராசிகளாக துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசிகள் உள்ளன.

துலாம்

துலாம் ராசிக்கு குரு பகவான் 8ம் இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது சிறந்த அமைப்பாகும். அதேபோன்று, ராகு பகவான் 6ல் இருந்து 5க்கும், கேது பகவான் 12ல் இருந்து 11க்கும் பெயர்ச்சி ஆகிறார். இது ஒரு அபரிவிதமான ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நிலையாகும். நீண்ட காலமாக இருந்த வந்த பணம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும் காலகட்டமாகும். தேவையான பொருளாதார சூழலை சமாளிக்கும் வகையில் பண வரவு இருக்கும்.

வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பதவி உயர்வு, அங்கீகாரம் இல்லை என்ற மன வருத்தம் நீங்கும் சாதகமான நிலை உருவாகும். தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இதுவரை இருந்து வந்த பண நெருக்கடி, மனக்கவலைகள் நீங்கும். வெளிநாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு முயற்சி செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ராகு பகவான் 5ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆனாலும், குரு பகவானின் 9ம் பார்வை பெறுவதால் மேலும் சாதகமான பலன்களை துலாம் ராசிக்காரர்கள் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிக்  கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக அமையும்.

ஜனன காலப்படி தற்போது நடக்கும் தசா, புத்திகள் மற்றும் குரு மற்றும் ராகு, கேது கிரகங்கள் நின்ற பாவகங்களை பொருத்து பலன்களின் அடிப்படையில் பலன்களில் சிறிய மாற்றம் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கு 6ம் இடத்தில் இருந்த குரு பகவான் 7ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 3ம் இடத்திற்கு ராகு பகவானும் 9ம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகின்றனர். ராகு பகவான் 3ம் இடத்திற்கு வருவதால், இதுவரை முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். முயற்சிகளில் வெற்றிகளை பெறும் காலகட்டமாகும். வெளியூர், வெளிநாடு சார்ந்த தொழில் மற்றும் வேலைகள் சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் 6ல் இருந்து 7ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால், கடன் சார்ந்த நிகழ்வுகள் தீரும் காலகட்டமாகும். வீடு, இடம், சொத்து சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும் காலம். திருமண வயதில் இருப்பவர்களுக்கும் அல்லது திருமணத்தில் தடைகளை சந்தித்தவர்களுக்கும் சாதகமான சூழலை குரு பகவான் தர உள்ளார். தொழிலில் வாடிக்கையாளர்களின் அணுகு முறைகள் சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்கள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.  வேலையில் சக நண்பர்களிடம் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

ஜனன காலப்படி தற்போது நடக்கும் தசா, புத்திகள் மற்றும் குரு மற்றும் ராகு, கேது கிரகங்கள் நின்ற பாவகங்களை பொருத்து பலன்களின் அடிப்படையில் பலன்களில் சிறிய மாற்றம் இருக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version