ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் கும்ப ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. ராகு கும்ப ராசியிலும் சனி மீன ராசியிலும் மேஷத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், குரு சிம்மத்தில் கேது, செவ்வாய் என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் செயல்கள் நீங்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் உறவுகள் உருவாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக கை நிறைய சம்பளத்தில் நல்ல கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று வணங்குவது தோஷங்களை நிவர்த்தியாக்கும்.

ரிஷபம்: மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த மாதம். குடும்பத்தில் குடும்பத்தில் உற்சாகத்தை தரும். வேலை செய்யும் இடத்தில் டென்சன் அதிகரிக்கும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். வேலை, பிசினஸ் விசயமாக வெளியூர் செல்வீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். காதல் கைகொடுக்கும். வரன் பார்த்து முடிவு செய்யலாம். உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அருமையான நேரம். வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பிரதோஷ நாளில் சிவனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார்.குடும்ப ஸ்தானத்தில் காதல் கிரகங்கள் இணைந்துள்ளன. வாக்கு பலிதமாகும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேலையில் மாற்றம் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணமானவர்கள் வாழ்க்கைத்துணையோடு பேசும் போது வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை. பெரிய அளவில் தொழிலில் முதலீடு செய்து விடாதீர்கள். புதன்கிழமை பெருமாளுக்கு அரளிப்பூ மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்: விபரீத ராஜயோக காலம் உண்டாகும். புது வேலையும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன் பயணம் செய்வதால் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும். தொழில் வியாபாரத்தில் திடீர் மாற்றம் உண்டாகும். திருமணம் தொடர்பாக வரன் பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். மன அமைதியும் நிம்மதியும் வரும். விழிப்புணர்வோடு கவனத்தோடு இருக்க வேண்டிய மாதமாகும். திங்கட்கிழமை சிவ ஆலயம் சென்று பாலபிஷேகம் செய்து வணங்குங்கள்.

சிம்மம்: அஷ்டமத்து சனி காலம் என்பதால் வேலையில் புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலைக்காக புதிய முயற்சிகள் எதுவும் தேவையில்லை. இருக்கிற வேலையே திருப்தியாக இருக்கும். எதையும் திட்டமிட்டு முடிவு செய்யுங்கள். திருமணம் நடந்தவர்களுக்கு குடும்பத்தில் சில குழப்பங்களும் கோபங்களும் வந்து நீங்கும். வேலை விசயமாக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். காதலிப்பவர்கள் கவனத்தோடு பேசுங்கள். உங்களின் பேச்சே பிரிவை ஏற்படுத்தி விடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கன்னி: ஜூன் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். செல்வ வளம் பெருகும். திடீர் பண வருமானம் வரும். தொழிலில் நல்ல தன வருமானம் வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வந்து போகும். உயர்கல்விக்காக அதிக செலவு செய்வீர்கள். கல்விக்காக கடன் வாங்குவீர்கள். புதன் இந்த மாதத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதம். நிறைய சுப செலவுகள் வந்து போகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்: உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். பதவி யோகம் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். வருமானத்தில் அபார வளர்ச்சி உண்டாகும். புதன் இந்த மாதத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. புதிய தொழில் தொடங்க ஏற்ற மாதம் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக முயற்சி செய்யலாம். திருமணத்திற்கு தேவையான வரனை பேசி முடிக்கலாம். திருமணம் முடிந்தவர்களுக்கு நெருக்கம் கூடும். அன்பும் காதலும் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பெண்களுக்கு மன நிறைவான மாதம். நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: செய்யும் வேலையில் பிரச்சினையில்லை என்றாலும் புதிய முயற்சிகயை செய்ய வேண்டாம். காரணம் 8ஆம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் புதிய வேலை தொழில் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். போட்டி பொறாமைகள், எதிர்ப்புகள் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். பயணங்களில் கவனம் தேவை. புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை தரப்போவதால் உயர்கல்வி யோகம் கைகூடி வரும். படிப்பில் அக்கறையும் கவனமும் தேவைப்படும். சூழ்நிலைக்கு தகுந்தது போல பேசுங்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பணம் கடனாக கொடுக்க இது ஏற்ற கால கட்டம் அல்ல. செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று செவ்வரளி மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு: உங்கள் ராசிக்கு ராசிநாதன் குரு பகவான் 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகள், வேலைக்காக செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாத இறுதியில் புதனும் சூரியனும் இணைந்து 7ஆம் வீட்டில் கூட்டணி அமைக்கின்றனர். புதன் சூரியனுடன் உடன் புதாதிபத்திய யோகத்தை தரப்போகிறது. அற்புதமான யோகம் கைகூடி வரப்போகிறது. மனதாலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் தெளிவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வெளியூர் செல்லும் போது உணவுகளில் கவனம் தேவை. வியாழக்கிழமை குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

மகரம்: உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமாக இருப்பதால் பண வருமானம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை கூடும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண வருமானம் அதிகரிக்கும். நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தடைபட்டிருந்த காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்குவது நல்லது.

கும்பம்: எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள் காரணம் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய சொத்துக்கள் வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதீர்கள். எதையும் எளிதாக கடந்து விடுங்கள். கோபத்தோடு பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. சனி பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. ஜென்ம சனி சில நேரங்களில் மன குழப்பத்தை ஏற்படுத்துவார். சூரியன் புதன், குரு இணைந்து பயணம் செய்வதால் வேலையில் பிரமோசன் கிடைக்கும். கல்யாண யோகம் கைகூடி வரும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவைப்படும். திட்டமிடாத பயணங்கள் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும். பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம், புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நிதானம் தேவை. குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version