மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..!

மேஷம்:மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களை சுற்றி பதட்டமான சூழல் நிலவும். பிறருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பொறுமையாகவும், மரியாதையோடும் பிறருடைய உணர்வுகளை கையாளுங்கள். இன்றைய அனுபவம் உங்களுடைய உட்புற வலிமையை அடையாளம் காண்பதற்கு உங்களுக்கு உதவும்.அதிர்ஷ்ட எண்: 8அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உடனான உறவு வலுவாகும். புதிய உறவுகள் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது நெருக்கமானவர்களோடு மேலும் நெருங்குவதற்கு உதவியாக இருக்கும். உங்களுடைய பச்சாதாப உணர்வு பிறரை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்வது உங்களுடைய மன ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.அதிர்ஷ்ட எண்: 5அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மிதுனம்:இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு பாசிட்டிவான நாளாக இருக்கும். உங்களுடைய யோசனைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். புதிய ஆற்றல் தோன்றும். சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்றைய நாளில் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.அதிர்ஷ்ட எண்: 4அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். உங்களுடைய மனநிலை சற்று பாதிக்கப்படலாம். உறவுகளுக்குள் பதட்டமான சூழல் நிலவலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு வாக்குவாதங்கள் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பொறுமையோடு விஷயங்களை கையாளுங்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து நடப்பதன் மூலமாக இன்றைய நாளில் வரும் சவால்களை எளிதாக சமாளிக்கலாம்.அதிர்ஷ்ட எண்: 13அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்:இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். தனிப்பட்ட உறவில் மகிழ்ச்சி அதிகம் ஆகும். நெருக்கமானவர்களோடு நேரம் செலவழிப்பதற்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு நேரம் செலவு செய்வது மன வலிமையை அதிகரிக்கும். உங்களுடைய புத்தாக்க திறன் அதிகமாகும்.அதிர்ஷ்ட எண்: 11அதிர்ஷ்ட நிறம்: நேவி ப்ளூ

கன்னி:கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். இன்றைய சூழல் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இது உங்களுடைய உணர்வுகளை பாதிக்கும். பிறர் மீதான உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் கிடைக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போகலாம். இந்த சமயத்தில் பொறுமை காப்பது மிகவும் அவசியம். உங்களுடைய யோசனைகளை தெளிவாக வெளிப்படுத்துங்கள்.அதிர்ஷ்ட எண்: 1அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்:துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் மனதிற்கு நெருக்கமானவர்களோடு நேரம் செலவு செய்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களோடு சிறப்பான தருணங்களை கொண்டாடுவீர்கள். சிறிய பிரச்சனைகள் அல்லது வாக்குவாதங்களை சரிசெய்வதற்கு இது உகந்த நேரம். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படையாக காட்டுங்கள்.அதிர்ஷ்ட எண்: 15அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்:இன்றைய நாள் விருச்சிக ராசிகாரர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உறவுகளுக்குள் பதட்டமான சூழ்நிலை நிலவும். இதனால் நீங்கள் சற்று வருத்தத்தோடு காணப்படுவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். வாக்குவாதங்களின் போது பொறுமை காக்கவும். பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்றைய நாளில் வரும் சவால்களை வெற்றிகரமாக கையாளுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 3அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

தனுசு:தனுசு ராசிக்காரர்கள் இன்று ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கலாம். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட உறவில் வாக்குவாதங்கள் நடைபெறலாம். அதனை நீங்கள் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதற்கு உங்களுடைய யோசனைகளை தெளிவாக வெளிப்படுத்துங்கள். உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்:மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். உங்களுடைய ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். உறவுகளுக்குள் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். மனதிற்கு நெருக்கமானவர்கள் உடனான உறவு வலுவாகும். உங்களுடைய உரையாடல்களில் தெளிவு மற்றும் நேர்மறையான எண்ணம் வெளிப்படும். சமூகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்றைய நாள் சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.அதிர்ஷ்ட எண்: 9அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

கும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். உங்களுடைய யோசனைகளையும், உணர்வுகளையும் பிறரிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்களை சுற்றி நேர்மறையான ஆற்றில் காணப்படும். இதனால் உங்களுடைய சமூக வட்டம் வலுவாகும். மனதிற்கு நெருக்கமானவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களுடைய புத்தாக்க திறன் மூலமாக புதிய யோசனைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய அனுபவங்களை பிறரிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 6அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்:மீன ராசிக்காரர்களுக்கு இன்று உணர்வுகளில் ஒரு சில ஊசலாட்டங்கள் ஏற்படலாம். எனினும் உங்களுடைய உணர்வுகளை கவனமாக கையாளுங்கள். வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வாக்குவாதங்களின் போது பொறுமையாக இருந்து விஷயங்களை கையாளுங்கள். உணர்வுபூர்வமான உரையாடல்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையான எண்ணத்தோடும், பொறுமையோடும் கையாளுங்கள்.அதிர்ஷ்ட எண்: 2அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version