Author: Editor TN Talks

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரம் பெறப்பட்டது. இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு. M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது (Sales Banned). அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட…

Read More

யார் இந்த அஜய் ரஸ்தோகி கரூர் சம்பவத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தாகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 1958-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிறந்தவர் அஜய் ரஸ்தோகி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகழ் பெற்ற சிவில் வழக்கறிஞரான ஹரிஸ் சந்திர ரஸ்தோகியின் மகன் அஜய் ரஸ்தோகி 1982-ல் சட்டத்துறையில் பயணத்தை தொடங்கிய அஜய் ரஸ்தோகி பல்வேறு சட்டப் பிரிவுகளில் பணியாற்றி வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாக பொறுப்பு அரசியலமைப்பு சட்டம், சேவை சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்திய அஜய் ரஸ்தோகி 1990-ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஜய் ரஸ்தோகி 1990 முதல் 2004 வரை நிரந்தர நீதிபதியாக செயல்பட்ட அஜய்…

Read More

ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமரிச்த்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம். கண்டனம் தெரிவிக்கிறோம். ஆணவ படுகொலைக்கு சட்ட இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. எல்லா பிரச்சனைக்கும் காங்கிரஸ் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை. அவருக்கு அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்ததுபோல் பேசுகிறார்.எங்களுக்கு இபிஎஸ் போல அநாகரீகமாக, கொச்சையாக பேச தெரியாது. இபிஎஸ் சட்டப்பேரவையிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். வெளிநடப்பு செய்துவிடுவார். உதய்மின் திட்டம், நீட், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால், அதில் இபிஎஸ் கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, அடிமைத்தனம் செய்பவர் எங்களைப்…

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு மேற்கு ஒன்றிய மற்றும் நகர கழகம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் திமுக ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த கொடுங்கோல் ஆட்சி மாறவேண்டுமானால் அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஏக மனதாக பொதுமக்களும், தாய்மார்களும் தீர்மானித்து விட்டனர். ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் உள்ளன. 2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என பேசினார்.

Read More

கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடக்கிறது ,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் சிறப்பு விருதுகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையேற்று விருதுகள் வழங்கி, மலர் வெளியீட்டு விழாப் பேருரையாற்றுகிறார். தமிழ் வளர்ச்சித் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வரவேற்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர், செயலாளர் விஜயா தயாளன் ஆகியோர் முன்னணி வகிக்கின்றனர். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் நன்றி கூறுகிறார். இவ்விழாவில்,…

Read More

திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான 2026 தேர்தல் பணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருப்பதாக, திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், பகுதி வாரியாக நடைபெற உள்ளன. மண்டலம் 1 க்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக்கு, சூளைமேடு அண்ணா நெடும்பாதை, ராகவன் தெரு, மீனாட்சி நாராயணன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், வரும்,…

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 318 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 58ஆக இருந்தபோது, கே.எல்.ராகுல் 38 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தனர். இதனை யடுத்து, 145 பந்துகளில் ஏழாவது…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர். இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு…

Read More

பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸிற்கு ஏதாவது ஆனால் அனைவரையும் தொலைச்சிடுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய ராமதாஸ் நேற்று முன் தினம் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்து வரும் ராமராஸ கட்சி நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமதாஸை சந்திப்பவர்களை அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளர். சென்னை உத்தண்டியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார் ஒரு வாரத்திற்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்டு இந்த ஆன்சியோ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை காட்சி பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை…

Read More