நானும், ரஜினியும் மீண்டும் இணைந்து நடிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், ரஜினி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ரஜினி, நல்ல கதை இருந்தால் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பேன், அவருடன் நடிக்க ஆசை இருக்கிறது என்றார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினியுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினியும், நானும் இணைந்து படம் நடித்து இருக்கிறோம். மீண்டும் நடிப்போம் என கூறியுள்ளார்.
இதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க போவது உறுதியானதாக இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.