1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிவிஆர் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஐநாக்ஸ் உடன் கைகோர்த்து பிவிஆர் ஐநாக்ஸ் என்ற பெயரில் புதிய அவதாரம் எடுத்தது. கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர். 110க்கும் மேற்பட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 1750 ஸ்கிரீன்களை கொண்டு இயங்கி வரும் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் மொத்தம் 1887 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

நிதியாண்டு 2020-21: ₹ 723.50 கோடி நஷ்டம்

நிதியாண்டு 2021-22: ₹ 478.35 கோடி நஷ்டம்

நிதியாண்டு 2022-23: ₹ 332.98 கோடி நஷ்டம்

நிதியாண்டு 2023-24: ₹ 35.70 கோடி நஷ்டம்

நிதியாண்டு 2024-25: ₹ 276.90 கோடி நஷ்டம்

சுமார் 10,872 கோடி ரூபாய் மார்க்கெட் கொள்ளளவு கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடத்தில் தொடர்ச்சியாக இவ்வளவு கோடி ரூபாய் இழந்து வருவது மக்களிடையே பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சந்தித்து வரும் இந்த தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுவது கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கம், அதிக இயக்கச் செலவுகள், இணைப்புகள் மற்றும் OTT தளங்களின் அதிகரித்து வரும் ஆதிக்கம் போன்ற காரணங்கள் தான்.

மறுபக்கம் பிவிஆர் ஐநாக்ஸ் இவ்வளவு கோடி ரூபாய் தொடர்ச்சியாக இழந்து வருவதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனம் வசூலிக்கும் அதிக கட்டணம், அதுமட்டுமின்றி தின்பண்டங்களை அதிக தொகைக்கு விற்பனை செய்வது என்று மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version