பள்ளி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை, பள்ளி செல்லும் வழியில் முனிராஜ் என்பவர் இடைமறித்து கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை கத்தியால் குத்திய முனிராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு சென்ற மாணவியை வழியில் இடைமறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version