தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “கவிப்பேரரசு திரு.வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனையடைந்தேன். தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
என்னைப் பெற்ற அன்னை
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை (ஞாயிறு) மாலை நடைபெறும்” என்று பதிவிட்டிருந்தார்.