பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன், பல்வேறு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
குளோரி மற்றும் ட்ரெயினிங் டே திரைப்படங்களில் வெளிப்படுத்திய மிக சிறந்த நடிப்பிற்காக அவர் இரண்டு முறைகள் ஆஸ்கர் விருது பெற்றுள்ள பெருமையுடையவர்.
இந்நிலையில், டென்ஸல் வாஷிங்டன் நடித்துள்ள சமீபத்திய திரைப்படமான ‘ஹையஸ்ட் டு லோயஸ்ட்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஸ்பைக் லீ இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த விழாவில், டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. இந்த மரியாதையை அவரது நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குநருமான ஸ்பைக் லீ வழங்கிய போது, நிகழ்வில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டிப் பெரும் வரவேற்பை அளித்தனர்.
விழா தொடக்கத்தில், கேன்ஸ் திரைப்பட விழா இயக்குநர் தியரி ஃப்ராமாக்ஸ், டென்ஸல் வாஷிங்டனின் புகழ்பெற்ற திரைப்படங்களின் குறிப்பிட்ட கிளிப்பிங்ஸ் கொண்ட ஒரு சிறப்பு வீடியோவையும் திரையிட்டார்.
இந்த விருது, ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல், உலகளாவிய சினிமாவில் டென்ஸல் வாஷிங்டன் தொண்டளிக்கப்பட்டுள்ள மாபெரும் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
