2025ஆம் SRO மோட்டார்ஸ்போர்ட் குழு விருது விழா இத்தாலில் உள்ள வெனிஸ் நகரத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.ரோமானிய பாரம்பரிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, விருது கொடுத்த விழா நடைபெற்ற கட்டிடம் வெனிஸ் பாணியின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் நவீன நிகழ்வு இடமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டிற்கான ஜென்டில்மேன் டிரைவர் “Gentleman Driver” விருதினை நடிகர் அஜித் குமாருக்கு SRO மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுவின் பிரசிடெண்ட் ஸ்டீபன் ரேடல் வழங்கினார்.

திரு. பிலிப் சாரியோல் ஒரு புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பாளர் மற்றும் பந்தய ஆர்வலர் ஆவார், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பந்தய விபத்தில் துயரமாக உயிரிழந்தார். திரு. பிலிப் சாரியோலின் நினைவாக அவரது மகள் கோரலி சாரியோல் அவர்களால் நிறுவப்பட்ட விருதுதான் இந்த ஜென்டில்மேன் டிரைவர் “Gentleman Driver” விருது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதினை பெற்ற அஜித்குமார், “மறைந்த திரு பிலிப் சாரியோல் மிகவும் நல்ல மனிதர்.அவர் உண்மையில் நிறைய பேருக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் கொடுத்த தலைசிறந்த மனிதர். அவரது மரபை அவருடைய மகள் பின்பற்றி வருவது பாராட்ட வேண்டிய விஷயம்”, என்று பெருமையாக அஜித் குமார் பேசினார்.

மேலும் GRO மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் குழும பிரசிடெண்ட் ஸ்டீபன் ரேடலிடம், “சார் நீங்கள் கூடிய விரைவில் இந்தியாவில் ஒரு சில ரேசிங் பந்தய நிகழ்வுகளை நடத்த வேண்டும். நீங்கள் இந்தியாவில் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”, என்றும் தன்னுடைய கோரிக்கையை முன் வைத்தார்.

இந்த விழாவில் அஜித்குமார் அது மனைவி ஷாலினி மற்றும் அவருடைய மகள் அனோஷ்கா அஜித் குமார் மற்றும் அவருடைய மகன் ஆத்விக் அஜித்குமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version