நான் ஓடினால் படமும் வெற்றி அடையும் என்ற ஒரு மூடநம்பிக்கை தன்னிடம் இருப்பதாக நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார்.
பாலிவுட்டின் உச்சபட்ச நடிகரான ஷாருகானுக்கு, இந்தியாவை தாண்டி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். 2023-ல் ஜவான், டைகர் 3, டங்கி என 3 படங்கள் கொடுத்தவர், இரண்டு வருடங்களாக பிரேக் எடுத்துள்ளார். அடுத்தாண்டு அவரது கிங் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஷாருக்கான், தனக்கு இருக்கும் மூடநம்பிக்கையை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது ”டார் படத்தில் சன்னியை விட்டு விட்டு ஓடிய போது அந்த படம் வெற்றி பெற்றது. கரன் அர்ஜூன் படத்தில் ஓடினேன் வெற்றி பெற்றது. தில்வாலே படத்தில் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருந்தேன். அது போல் இப்போது கொய்லா படத்தில் நிறைய ஓடினேன்.
சில நேரங்களில் நாய்களை பின் தொடர்கிறேன். சில நேரங்களில் வில்லன்களை பின் தொடர்கிறேன். வில்லன்களுக்கு பயந்து ரெயில்களை பின் தொடர்கிறேன். எனவே படத்தில் நான் ஓடினால் படம் வெற்றி பெறும் என எனக்கு ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.