மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் திரை உலகினரும், பொதுமக்களும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ஏராளமான திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் வடிவேலு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்கு வருகை தந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலைப் பார்த்த நடிகர் வடிவேலு, திரையுலகில் தனக்கு வாழ்வளித்த மாபெரும் இயக்குநரின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்துவும் பாரதிராஜாவின் உடலுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.
