ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததற்காக ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜரானார்.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி உள்ளிட்ட நடிகர்கள், சமூக பிரபலங்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“ சூதாட்ட செயலிக்கும் கேமிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது. கேமிங் செயலி விளம்பரத்தில் மட்டுமே நடித்தேன். நான் பெற்ற பணம், ஒப்பந்தம், நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்துள்ளேன்” எனக் கூறினார். இதே வழக்கு விசாரணைக்காக கடந்த 30-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version