தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தனுஷுடன் ‘பட்டாஸ்’, ‘இந்திரா’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மெஹ்ரின் பிர்ஸாடா. இவர், ரகசியமாகத் திருமணம் கொண்டதாக பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வதந்திகள் என்னைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் மவுனமாக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியான தொல்லைகள் காரணமாக இப்பதிவை எழுதுகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டதாகப் போலியான கட்டுரை வெளியானது.
நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா, கடந்த 2021-ம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன், பவ்யா பிஷ்னோயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன், இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பிரிந்தனர்.
