சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலி தன்னை வாக்களிக்க விடவில்லை என நடிகை ரவீனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் சென்னை விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கியது. இதில் சுமார் 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். தினேஷ், பரத், சிவ சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 அணிகள் போட்டியிடுகின்றனர். அதேப் போல தலைவர் பதவிக்கு சுயேட்சையாக ஆர்த்தி கணேஷ் போட்டியிருகிறார்.

காலை முதலே சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ரவீனா தாஹா, தன்னை வாக்களிக்க விடவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”ரெட் கார்ட்’ வழங்கப் பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. `ரெட் கார்ட்’ இருந்தால் போட்டியிடதான் முடியாது, வாக்களிக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது” என்றார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் அறிமுகமானவர் ரவீனா தாஹா. விஜய் டிவியில் பைரவி கச்சேரி ஆரம்பம் எனும் சீரியலில் நடித்து வந்தவர், ப்ரோமோ வெளியான பிறகு, சிரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமாதானம் பேசியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சீரியல் தயாரிப்பாளர், அவர் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில்,

ரவீனா எந்த சீரியலிலும் நடிக்கக் கூடாது, ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ள கூடாது என ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version