கோவை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் இயக்குநர் ராஜ் நிதிமோரு – நடிகை சமந்தா இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பெண்ணான நடிகை சமந்தா, கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, தன்னுடன் நடந்த, சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இரண்டே வருடத்தில் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோரு என்பவரை அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் அவ்வபோது வெளியாகி வந்தனர். சமந்தா முதல் முதலில் நடித்த ஃபேமிலி மேன் 2 வெப்தொடரின் இயக்குனர் இவராவார்.
இந்தநிலையில், கோவை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் இயக்குநர் ராஜ் நிதிமோரு – நடிகை சமந்தா இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமணத்தில் மொத்தம் 30 விருந்தினர்களே கலந்துகொண்டதாகவும், “சமந்தா திருமணத்திற்கு சிவப்பு நிற சேலை அணிந்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே, தனது இன்ஸ்டா பக்கத்தில் “விரக்தியடைந்தவர்கள் அவநம்பிக்கையான காரியங்களைச் செய்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இது சமந்தா – ராஜ் நிதிமோரு திருமணம் தொடர்பான ஊகங்களை வலுப்படுத்துவதாக தெரிகிறது. தகவல்களின்படி, ராஜ் நிதிமோரும் அவரது முதல் மனைவி ஷ்யாமலியை கடந்த 2022 இல் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
