ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்து வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “ இந்திய சினிமாவை உலகளவில் விளம்பரப்படுத்தும் ஒரு தளமாக ஸ்போர்ட்ஸை பயன்படுத்த நினைக்கிறேன்.
20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளுடன் உலகிலேயே மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர்களாக நாம் இருக்குகிறோம். விளையாட்டும், சினிமாவும் மக்கள் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை விளம்பரப்படுத்த, இந்தியன் சினிமா என்ற லோகோவை உருவாக்கி, அதை எனது அடுத்த கார் ரேஸில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
சரவதேச அளவில் நடத்தும் விருது விழாக்கள் மூலம் திரைப்படங்கள் உலக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. உதாரணமாக கொரிய படங்கள் இந்தியாவில் பிரபலமாகியுள்ளன. இதேபோல நம்ம நாட்ல எடுக்கற திரைப்படங்களுக்கும் உலகளவில் வரவேற்பு கிடைக்க வேண்டும். பாலிவுட் போன்ற ஒரு சில படங்கள் பட்டுமே உலக கவனத்தை ஈர்க்கிறது. இதேபோல இந்தியாவுல இருக்கற தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, போஜ்புரி மொழி சார்ந்த படங்களும் உலக ரசிகர்களை சேர வேண்டும். இதனால் கார் ரேசில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்த விரும்புகிறேன் என இந்திய சினிமாவில் அவர் வைத்துள்ள அதீத அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித்…
தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசிய அஜித், என்னால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும், எனக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதால் இரவில் அதிக நேரம் தூங்க முடியாது. அப்போது திரைப்படங்களை பார்ப்பேன் என்றார். மேலும் தன் மனைவி ஷாலினியின் ஆதரவு மட்டும் இல்லை என்றால் தன்னால் சினிமாவிலும், கார் பந்தயத்திலும் இவ்ளவு வெற்றிகளை பார்த்திருக்க முடியாது என்று தன் மனைவி ஷாலினியை பாராட்டியுள்ளார்.