நடிகர் சூர்யா நடித்து வரும் ’கருப்பு’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கருப்பு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் ஆ.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’கருப்பு’ படதிதின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளான 23-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version