பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி பாடும் ஆளுவா பொலியிட தீரத்து பாடலை நினைத்துப் பார்த்தாலே இந்த நடிகையின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அவர் வேறு யாருமில்லை கேரளாவைச் சேர்ந்த அனுபாமா பரமேஸ்வரன் தான். பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி காதல் வயப்படும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்திருப்பார். அதுதான் அவருக்கு முதல் திரை உலகில்  திரைப்படமுமாகும்.

அந்தப் படத்தில் இருந்து அனுபமா பரமேஸ்வரன் கேரளா திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்த வருடமே (2016) தமிழில் நடிகர் தனுஷுக்கு கதாநாயகியாக கொடி திரைப்படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார்.

பிரேமம் திரைப்படத்திலிருந்து தொடர்ந்து ரசிகர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து அனுபமா பரமேஸ்வரன் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதுவரையில் இந்த வருடத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் 6. அதுமட்டுமல்ல இன்னொரு திரைப்படமும் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது.

தமிழில் டிராகன், தெலுங்கில் பரதா மற்றும் கிஷ்கிந்தபுரி. அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா மற்றும் தி பெட் டிடெக்டிவ். அதைத் தொடர்ந்து தமிழில் சமீபத்தில் வெளியான பைசன் காலமாடன் என மொத்தம் ஆறு திரைப்படங்கள் வெளியாகிவிட்டது.

ஏழாவது திரைப்படமாக லாக்டவுன் என்கிற தமிழ் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஒரு கதாநாயகியாக ஏழு திரைப்படங்களில் நடித்து அந்த ஏழு திரைப்படங்களும் ஒரே வருடத்தில் வெளியான சாதனைக்கு  அனுபமா பரமேஸ்வரன் சொந்தக்காரராகிறார்.  அதுமட்டுமின்றி முதல் தென்னிந்திய நடிகையாகவும் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 7 திரைப்படத்தில் நடித்து, அந்த திரைப்படங்கள் வெற்றிகரமாக வெளியுமான சாதனைக்கும் சொந்தக்காரராகிறார்.

தென்னிந்திய நடிகைகள் மத்தியில் இதற்கு முன் அதிகபட்சமாக, 2023 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஆறு திரைப்படங்கள் வெளியாகின. தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பனா சுந்தரி, பர்ஹானா, புலி மாடம் மற்றும் தீரா காதல் ஆகியவை அந்த ஆறு திரைப்படங்கள் ஆகும். ஐஸ்வர்யா ராஜேஷின் அச்சாதனையை முறியடித்து தற்பொழுது அனுபவமா பரமேஸ்வரன் புதிய சாதனை படைத்திருப்பது கூடுதல் தகவல்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version