தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரும் வரவேற்பையும் அதேசமயத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இதன் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு இதன் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் 9-வது சீசன் இன்று (05/10/2025) தொடங்கி உள்ளது. விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார்.
இந்தமுறை ஒண்ணுமே புரியலையே என்ற Tagline உடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதில் மொத்தம் 20 பேர் பங்கேற்றுள்ளனர். முழுக்க சினிமாவில் இருப்பவர்கள் அல்லது சினிமாவுக்குள் செல்ல முயல்பவர்கள் என்ற இரண்டு பிரிவில் தான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாட்டர் மெலன் ஸ்டார் என்று வலம்வந்த வம்படி பேர்வழி திவாகர் முதல் போட்டியாளராக வந்ததுமே என்ன மாதிரியான நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தபடியாக பலூன் அக்கா என அறியப்படும் அரோரா சின்க்ளேர் இடம்பெற்றுள்ளார். திரைப்பட இயக்குநர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முக திறமை கொண்ட பிரவீன் காந்தியும் ஒரு பங்கேற்பாளர். சின்னத்திரை நடிகர் கமருதீன், குக் வித் கோமாளியில் டைட்டில் வின்னரான கனி-யும் ஒரு போட்டியாளர்.

அவதூறு வீடியோக்களால் அறியப்பட்ட அருள்வாக்கு கலையரசன், நம்மை சிரிக்க வைத்த விக்கல்ஸ் விக்ரம், வீடியோ ஜாக்கி பார்வதி என்கிற பாரு, வாயொலி இசைக்கலைஞர் எஃப்.ஜே, முன்னாள் கூடைப்பந்தாட்ட வீராங்கனையும் இந்நாள் மாடலிங் கலைஞருமான கெமி ஆகியோர் மற்ற போட்டியாளர்கள். மேலும், சபரிநாதன், சுபிக்ஷா, வினோத், வியானா, நந்தினி, அப்சரா, ரம்யா ஜோ, துஷார், ஆதிரை, பிரவீன் என மொத்தம் 20 பேர் களமிறங்கி உள்ளனர்.
அறிமுக மேடையிலேயே போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நீல நிறம் மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டு ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. வீட்டிற்குள்ளும் இரண்டு பிரிவுகள் இருந்தன. அதிக எண்ணிக்கையிலான சாதாரண படுக்கை, குறைந்த எண்ணிக்கையிலான சிறப்பு படுக்கை. இதில் குறைவான எண்ணிக்கையிலான நீல நிறத்தை தேர்ந்தடுத்தவர்கள் சிறப்பு படுக்கையையை பெறும் வாய்ப்பை பெற்றனர்.
அதேபோன்று குக் வித் கோமாளி கனி மட்டுமே முதலில் சென்றவர்களில் அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீசை படித்தார் என்பதால் பிக் பாஸின் பாராட்டினைப் பெற்றார்.
பங்கேற்பாளர்களில் கிராமிய நடனக் கலைஞரான ரம்யா, மீனவ பெண்ணான நந்தினி ஆகியோரது கதைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
1 Aadhirai

2 Apsara

3 Aurora

4 Dhiwagar

5 FJ

6 Kalaiarasan

7 Kamarudin

8 Kani

9 Kemy

10 Nandhini

11 Parvathy

12 Pravin G

13 Praveen R

14 Ramya

15 Sabarinathan

16 Subhiksha

17 Tushaar

18 Vikram

19 Vinoth

20 Viyana

