பொதுவாகவே நிஜ உலகில் நடந்த சில நிகழ்வுகள் திரைப்படங்களாக வரும் போது அதனை மக்கள் கொண்டாடுவது உண்டு. காந்தி, காமராஜர் தொடங்கி அமரன் திரைப்படம் வரை நாட்டுக்காக ஒருவர் செய்த தியாகங்களை படங்களாக மக்கள் போற்றியது உண்டு. ஆனால் இவை அனைத்துமே, அவர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்த ஒன்று. ஆனால் இன்றைய திரையுலகம் முழுக்க முழுக்க வியபாரமயமானதாக மாறிவிட்டது. குறிப்பாக பாலிவுட் திரையுலகம். நெப்போட்டிசம், குரூப்பிசம் என குறிப்பிட்டவர்களின் கைகளில் மட்டுமே புரண்டு வருகிறது பாலிவுட். அறிவியல், தொழில்நுட்பம் என வளர்ந்து வரக் கூடிய ஒரு நாட்டில், மக்களை முட்டாள்களாகவே வைக்கும் நோக்கில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்..

இது தான் பாலிவுட் ரசிகர்களின் தலையெழுத்து என்று இருந்தால், தற்போது பாலிவுட் செய்திருக்கக் கூடிய செயல் மிகவும் கேடுகெட்ட, கீழ்தரமான ஒன்றாக உள்ளதாக, பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோரை நாம் இழந்து நிற்கின்றோம்.. அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிதான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இந்தியா. நேற்று (09.05.2025) பாகிஸ்தான் தரப்பில் டிரோன் மற்றும் ஷெல் குண்டுகள் மூலம் இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ’பஞ்சாபில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக’ செய்திகள் கிடைத்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலால் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ள பாகிஸ்தான் உலகம் முழுவதும் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதேப் போல இந்தியாவுக்கும் இந்த தாக்குதால் பொருளாதார சிக்கல் ஏற்பட பெரும் வாய்ப்புண்டு. இந்தியா நாகரீகமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை நோக்கி தாக்குதல் நடத்தினாலும், பாகிஸ்தான் இந்தியாவின் பாமர மக்களை குறி வைத்து தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முறியடிக்க இந்திய வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிக்கிறார்கள். இப்படியான சூழலில், பாலிவுட் திரையுலகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ’ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தலைப்பிற்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திரைத்துறை சங்கங்களில் ’ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தலைப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ”மஹாவீர் ஜெயின்” இந்த ரேசில் முன்னனியில் உள்ளாராம். ”T SERIES, ZEE STUDIOS” நிறுவனங்களும் இந்த ரேசில் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனராம். ’மிஷன் சிந்தூர்’, ’ஹிந்துஸ்தான் கா சிந்தூர்’, ’மிஷன் ஆப்ரேஷன் சிந்தூர்’, ’சிந்தூர் கா பத்காலா’ போன்ற பெயர்களிலும் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடே ஒரு அசாதாரணமான சூழலில் இருக்கும் போது அதற்கு தேவையானவற்றை செய்யாமல், தங்களது வியாபாரத்தில் குறியாக இருக்கும் பாலிவுட் திரையுலகை தாறுமாறாக வசைப்பாடி வருகிறார்கள் பொதுமக்கள். ”அனுமானுக்கு தனி சீட் கேட்டவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? பின்புலம் இல்லாமல் பாலிவுட்டில் கோலோச்ச முயற்சி செய்தால், நாட்டை விட்டே விரட்டியடிப்போம், அல்லது அவர்களையே விலக வைப்போம் என்ற அளவில் மூளை இல்லாத முட்டாள்கள் நிறைந்த பாலிவுட்டில் இது சாதாரணம்.. மக்களை விழிப்புணர்வு அடைய விடவே மாட்டோம் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படும் கேடுகெட்ட, மானங்கெட்ட திரையுலம் பாலிவுட்”.. என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version