Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»“வா வாத்தியார்” படத்தை வெளியிட இடைக்கால தடை… ஐகோர்ட் உத்தரவு
    சினிமா

    “வா வாத்தியார்” படத்தை வெளியிட இடைக்கால தடை… ஐகோர்ட் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025Updated:December 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    filmm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை நாளை (டிச.5) திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர்
    திவாலானவர் என கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் யிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும், அவர் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு, வா வாத்தியார் திரைப்படத்தை 5 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது
    Next Article கார்த்திகை வாழ்த்துப் போஸ்டர்.. அழித்து விட்டு மீண்டும் வெளியிட்ட செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    April 4, 2026

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.