தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ’இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதிலும், இயக்குவதிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’குபேரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
தமிழில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 4-வது திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள இப்படத்தில், தனுஷ் எழுதி ஸ்வேதா மோகன் குரலில் உருவாகியுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
