தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன் முதலாக ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் பீனிக்ஸ்.
இப்படம் கடந்த 4-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் சூர்யாவின் நடிப்பும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பபுல்காம் மென்று கொண்டே ரசிகர்களை சண்டித்தது பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் அனல் அரசு, ‘பீனிக்ஸ்’ படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, ‘நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.
ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்து, யோசித்து செயல்பட்டால் நல்லது. (சூர்யாவை நோக்கி) தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்சினைகளை தீர்த்துவிடும்”, என்றார்.
