வேள்பாரி கதையை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக போவதாக தகவல் கசிந்துள்ளது. வேள்பாரி என்னும் நாவலை சு. வெங்கடேசன் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த நாவல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 1408 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் இரண்டு பாகங்களாக வெளியானது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேள்பாரி கதை உரிமையை இயக்குனர் ஷங்கர் முன்பே வாங்கியிருந்தது அனைவரும் அறிந்த செய்தி.
இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு கனவு படமாக இருந்தது எந்திரன் திரைப்படம் தான். ஆனால் வேள்பாரி நாவலை படித்த பின்னர் வேள்பாரி கதையை திரைப்படமாக எடுக்க வேண்டிய எண்ணம் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. எந்திரன் கதையை விட இந்த வேள்பாரி கதை அவருக்கு அதிக சிந்தனையையும் அதிக வேலையையும் கொடுத்ததால், எந்திரன் படத்தை தாண்டி இந்த திரைப்படம் தான் ஷங்கரின் கனவு திரைப்படம் என்று இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் 90 சதவீதம் வேள்பாரி திரைப்படத்திற்கு ஏற்ற கதையும் திரைக்கதையும் எழுதி முடித்து விட்டதாக தெரிகிறது. மேலும் அவர் இந்த திரைப்படத்தை இரண்டு முதல் மூன்று பாகங்களாக எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கேம் ஆப் த்ரோன்ஸ் வெப்சீரியஸ் மற்றும் அவதார் திரைப்பட பாணியில் மிக பிரம்மாண்டமாக இயக்க அத்தனை அம்சமும் இந்த வேள்பாரி கதையில் இருக்கிறது என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி இயக்குனர் ஷங்கர் இந்தியன் 3 நிறைவுப் பணிகளை முடித்து அந்த திரைப்படம் வெளியான பின்னர், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா அல்லது விக்ரம் நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கபடுகிறது. குறிப்பாக சூர்யா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் இந்த வேள்பாரி கதையை மிக சிறப்பாக கையாண்டு, நல்ல திரைக்கதையுடன் சுவாரசியமாக மற்றும் ஜனரஞ்சகமாக குறிப்பாக அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு திரைப்படமாக எடுத்து விட்டால், நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு இந்த வேள்பாரி ஒரு மைல் கல்லாக அமையும்.
