ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக ரஜினி-கமல் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் மீண்டும் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் “உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
